மத்தியமுகாம் பாடசாலை மாணவிற்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)

நாவிதன்வெளி மத்திய முகாம் பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நளீர் பௌண்டேசன் அமைப்பினால் மடிக்கணினி ஒன்று அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.


நளீர் பௌண்டேசன் அமைப்பினரிடம் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி "கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தனக்கு மடிக்கணினி அத்தியாவசிய தேவையாக உள்ளது" எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நளீர் பௌண்டேசன் அமைப்பினால் சுமார் 160000 பெறுமதியான மடிக்கணினி மற்றும் ஏனைய உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, பொருட்கள் அனைத்தும் நாவிதன்வெளி பிரதேச செயலக செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் குறித்த மாணவியின் பெற்றோரிடம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் நளீர் பௌண்டேசன் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளருமான ஏ.நளீர், அமைப்பின் உபதலைவர் கே.எம்.நௌபர், மத்திய முகாம் பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.சி.பயாஸ் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.எம்.இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments