காகித நகர் கிராமத்தில் யானைகளின் அட்டகாசத்தினால் மக்கள் அச்சம்.



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் அட்டகாசத்தினால் மிகவும் சிறமப்படுவதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர்; பிரிவில் உள்ள மஜ்மா கிழக்கு, மஜ்மா மேற்கு, காகிதநகர், காவத்தமுனை போன்ற கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் உற்புகும் யானைகளின் அட்டகாசத்தினால் தங்களது வீட்டுத்தோட்ட பயிர்கள் சேதமடைவதுடன் எங்களது உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாமல் அச்சத்திலயே இரவு பொழுதை கழிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.


இன்று அதிகாலை மஜ்மா கிழக்கு பகுதிக்குள் புகுந்த யானைகள் தென்னை, பலா, முந்திரிகை, கொய்யா போன்ற மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.


பலவருடமாக சிறமங்களுக்கு மத்தியில் உருவாக்கிய மரங்களை பயன் பெறக்கூடிய நிலையில் தற்பொழுது ஒரு இரவில் புகுந்த யானைகள் அழித்து விட்டு சென்றுள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் இதே நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் யானை வேலி போட்டுத்தருவதாக தெரிவித்து சென்றாரகள் என்றால் பின்னர் அவர்களை காணமுடிவதில்லை என்றும் எங்களுக்கு தயவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யானை வேலிகளை அமைத்து யானைகளிடம் இருந்து பாதுகாப்பு பெற்றுத்தருமாறும் கோறிக்கை விடுகின்றனர்.

Post a Comment

0 Comments