சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறையில்  போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாருடன்  இணைந்து 12 கட்டாக்காலி மாடுகளை நேற்று இரவு பிடித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலையை கவனத்தில் கொண்டும்  இது தொடர்பாக பொதுமக்களினால் பிரதேச சபையின் மீது முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டதை தொடர்ந்தும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரதேச சபையின் 17ஆவது சபை அமர்வில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டள்ளது.

இதற்கமைவாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில்  போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள்  பிடிக்கப்பட்டுள்ளது. 

மாடுகளின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவும் மேலதிகமாக அறவிடப்படும் என பிரதேச சபை தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments